Skip to main content

Posts

சிறுவர் தின நிகழ்வு

 ஆலங்குடா கல் முனைக்குடி Aகிராமத்தில் இயங்கி வரும் அந் நூர் பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று 01/10/2026ம் திகதி பாலர் பாடசாலையின் ஆசிரியை மற்றும் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மிகவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. 
Recent posts

வவுனியாவில் கையெழுத்து பெறப்பட்டது.

 அனோஜனுக்காக் இன்று கையெழுத்து பெறப்பட்டது. சவுதி அரேபியாவில் கைதாகி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச்சேர்ந்த அனோஜனை விடுதலை செய்யக்கோரி வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின். பின் மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு பள்ளிவாயளின் முன் ஏற்பாடுசெய்யப்பட்டது,இதன் அதிகளவிலான மக்கள் தங்களின் கையெழுத்திட்டு அனோஜனின் விடுதலை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

கை கட்டிப்பார்த்த ஜனாதிபதி

 கை கட்டிப்பார்த்த ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி அனுரகுமார கை கட்டிப்பார்த்த சம்பவம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றது இலங்கை நாட்டின் ஜனாதிபதி யான அனுரகுமார திசானாயக்க அவர்கள் மன்னாரில் புதிதாக வைத்தியசாலையில் கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டசென்றார். அப்போது அவரோடு வருகை தந்த இந்திய தூதுவர்,வடமாகாண ஆளுனர்  மற்றும் முக்கிய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினரகள் மற்றும் அதிகாரிகள் அடிக்கள் நாட்டுவதற்க்கான வாய்ப்பை அனைவருக்கும் வழங்கிவிட்டு தான் இந்த நிகழ்வை கை கட்டிப்பார்த்த சம்பவம் மக்களிடையே பேசுபொருளாக மாரியுள்ளது. ஒரு நாட்டின் ஜனாதிபதி முக்கிய நிகழ்வொன்றில்  மற்றவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்  நிகழ்வு மக்களிடையே ஜனாதிபதிக்கு மேலும் நற்பெயரை கொண்டுசேர்த்துள்ளது. 17-09-2026

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

சம்பியனானது கல்பிட்டி வேல்ட் லயன் கிரிக்கெட் அணி

 சம்பியனானது கல்பிட்டி வேல்ட் லயன் கிரிக்கெட் அணி புத்தளம்,நுரைச்சோலை லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய மென்பந்துசுற்றுப்போட்டியானது ஆகஸ்ட் மாதம் 21,22,23ம் திகதிகளில் போல்ட் ஸ்டார் மைதானத்தில் நடாத்தப்பட்டது . இந்த தொடரில் பல அணிகள் கிண்ணத்தை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில் போட்டியில் பங்குபற்றின,இந்த தொடரில் பங்குபற்றி கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகையாக ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டது இந்த தொடரில் இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூபா 50000ம் அறிவிக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது. பணப்பரிசையும் கிண்ணத்தையும் கைப்பற்றும் நோக்கில் பல அணிகள் போட்டிபோட்டாலும் இறுதிப்போட்டிக்கு கல்பிட்டி வேல்ட் லயன் அணியுடன்  இறுதிப்போட்டியில் விளையாட  கோல்ட் மூன் அணி தகுதி பெற்றது இரண்டு பலம் பொருந்திய அணிகளும் இறுதிப்போட்டியில் மோதின இறுதியில் இந்த தொடரில் சம்பியணாக கல்பிட்டி வேல்ட் லயன் அணி மகுடம் சூடியது.வெற்றிபெற்ற அணிக்கு கல்பிட்டி பிரதேசசபைத்தலைவர் Asm.றிகாஸ் அவர்களின் கரங்களினால் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.மேலும் இந்த கிண்ணம் வேல்ட் லயன் அணிய...

கடமையைப்பெறுப்பேற்றார் வைதியர் சுகுணன்

 கடமையைப்பெறுப்பேற்றார் வைத்தியர் சுகுணன் கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் விபத்தொண்றில் காயமடைந்ததன் காரணமாக 21நாட்களாக பணிக்குவராமல் இருந்தார்.மீண்டும் தேக ஆரோக்கியம் பெற்றதன் காரணமாக 24/08/2026திங்கள் கிழமை மீண்டும் தான் கடமை புரியும் வைத்தியசாலைக்கு சமூகம் தந்தார். இன்று கடமைக்கு வருகை தந்த பணிப்பாளர் சுகுணன் அவர்களுக்கு பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீசங்கர் தலைமையில் இந்துமத மற்றும் இஸ்லாமிய முறையில்  சமய வழிபாடுகள். செய்யப்ப்பட்டது. அதன் பின்னர் வைத்தியரினால் கடமைபுரியும் வைத்தியர்கள்,தாதிமார்கள்,ஊழியர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

சவுதி குர்ஆன் மனனப்போட்டி இலங்கை க்கு மூன்றாமிடம்

 குர்ஆன் மனனப்போட்டியில் இலங்கை மாணவன் மூன்றாம் இடம்  சவுதி அரேபியாவில் நடைபெற்ற மன்னர் அப்துல் அஸிஸ் குர்ஆன்  மனனப்போட்டியில் இலங்கை கல்ஹின்னை பிரதேசத்தைச்சேர்ந்த  அல் ஹாபிழ் இம்தாத் இல்யாஸ் மூன்றால் இடத்தைப்பிடித்தார். இதன் மூலம் இலங்கையின் புகழை உககெங்கும் வெளிக்காட்டியுள்ளார் சுமார் 133 நாடுகளைச்சேர்ந்த 334 மாணவர்கள் இந்த குர்ஆன் மனனப்போட்டியில் கலந்துகொண்டனர். இந்த குர் ஆன் மனனப்போட்டியில் 5ம் பிரிவில் கலந்துகொண்ட  இலங்கையைச்சேர்ந்த் அல் ஹாபில் இம்தாத் இல்யாஸ் கடுமையான போட்டியாளர்களுடன் போட்டிபோட்டு இந்த  குர்ஆன் மனனப்போட்டியில் மூன்றால் இடத்தைப்பிடித்தார். அல் ஹாபிழ் இம்தாத் இயாஸுக்கு 55,000 சவூதி ரியல்கள் (சுமார் 4,900,000 இலங்கை ரூபாய்) பரிசாக வழங்கப்பட்டது.

இந்தியா இலங்கை 2துடெஸ்ட் போட்டி

 இரண்டாவது டெஸ்ட்போட்டியின் முதல் நாள் முடிவு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இந்திய அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது இந்த போட்டியானது கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது  இந்திய அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் ஆரம்ப வீரர் ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்களையும், ராகுல் டிராவிட் 18, ஓட்டம் படிக்கல் 117 ஓட்டம், அணி தலைவர் 50 ஓட்டம், ரிசப் பந்த் மூன்று ஒட்டங்கள் பெற்றிருந்த வேளையில் சுகையினம் காரணமாக ஒய்வரை திரும்பினார் ஜடேஜா 43 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா சார்பாக ஜூரையில் ஏழு ஓட்டங்களுடனும் ஜாயிண்ட் நான்கு ஓட்டத்திலும் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.  இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அசித்த பெர்ணாண்டோ  மூன்று(3) விக்கெட்டுகளையும் லகிரு குமார  விக்கெட்டையும் நுவன் 1விக்கட்டையும் கைப்பற்றியுள்ளார்கள் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியானது 300 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழந்து துடுப்பு படுத்தாடிக் கொண்டிருக்கின்றது செய...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...